December 16, 2012

பஞ்சாங்கம் எது சரி ? - 3

பதிவு ... 4



     மேற் கூறிய வாக்கிய முறையினின்றும் மாறு பட்டு தெளிவான கணித முறையில் உருவானது திருக்கணித முறையாகும்.
த்ருக் என்றால் பார்வை என்று பொருள். அதாவது கோள்களை நமது கண் களால் பார்த்து கணித்து அறியப் பட்ட முறையே திருக்கணிதம் என்கிறோம்.   
        கோள்களை காண தொலைனோக்குக் கருவியை 1610 ஆம் ஆண்டு கலிலியோ கண்டு பிடிக்கிறார்.
     ஆங்கிலேயர்களால் 1766 ஆம் ஆண்டு, முதன்முதலில் நாட்டிகல் அல்மனாக் (Nautical Almanac) என்னும் Ephemeris வெளியிடப்பட்டது. அதன் பின் 1819 ல் ரபேல்ஸ் அஸ்ட்ரானமிகல் எபிமெரிஸ்  (Raphael’s Astronomical ephemeris) வெளி வந்தது. இந்தியாவில் 1869 ஆம் ஆண்டு Gupta press- directory panchanka from kolkatta பெங்காலி மொழியில் வெளி வந்ததாக சான்றும் உள்ளது.
     கி.பி.1890ல்  Indian Calendric system என்ற புத்தகத்தில் Ketkar என்பவர் Jyotir ganitha என்ற எபிமெரிஸ் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆக, இந்தியாவில் திருக்கணித முறையானது 18 ஆம் நூற்றாண்டில் தான் வந்திருக்கக் கூடும் என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது.
     தற் சமயம் திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் அனைத்து எபிமெரிஸ்களையும் NASA  வின் LE 405 JPL கொடுக்கும் கோள் நிலையைக் கொண்டே  பயன்படுத்தி வருகிறோம். 

தொடரும் . . . 


2 comments:

guru said...

Master,18ம் நூற்றாண்டில் தான் திருக்கணிதம் வந்தது என்றால் காலம் காலமாய் வந்த வாக்கியம் சரியானது தானே ?

Unknown said...

குரு, கட்டுரை முழுவதும் முடியட்டும் பிற்கு உங்கள் சந்தேகங்களை கேளூங்கள்.