December 26, 2012

பஞ்சாங்கம் எது சரி ? - 7

பதிவு ... 8



(Pic : Thanks to wikipedia)

   வாசன் பஞ்சாங்கத்தின் பின் அட்டை உள் பக்கத்தில் உள்ள ஒரு குறிப்பை நாம் காணலாம்.  சூரியனும், சந்திரனும், பூமியும்  ஆகர்ஷண சக்தியால் ஒன்றுக்கொன்று இழுக்கப்படுகிறது. அதனால் சந்திரனின் பாதையில் அவ்வப்போது வித்தியாசம் ஏற்படும் இந்தக் கதி பேதத்தை வாக்கிய பஞ்சாங்கத்தில் சேர்ப்பதில்லை என்றும், இதனால் 17 நாழிகை வரை வித்தியாசம் வருகிறது இதனை கவனித்து கோவில் தேவஸ்தான அதிகாரிகள் மக்களுக்குச் சரியான விரதாதிகளை அனுஷ்டிக்க வகை செய்யும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
      கோள்களின் ஆகர்ஷண நிலையால் வானில் சிறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இதனை பீஜ சம்ஸ்காரம் செய்து அதாவது திருத்தம் செய்து பயன்படுத்தினால் அது திருக்கணித பஞ்சாங்கம் ஆகும்.
 
 ஜோதிட உலகில், ஆரம்பத்தில் வான சாத்திரம் ஆராயப்பட்ட போது, த்ருக் எனும் பார்வையினால் கண்டறிந்து, சரியான கணக்கீடுகளுடன் கிரக அமைப்புகள் தரப்பட்டன.
  பின் வாக்கியம் முறை உருவானது.
 இறுதியாக மீண்டும் திருக்கணித முறையே உருவாகியுள்ளது.
     
     பஞ்சாங்கம் பற்றிய இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.
காஞ்சி மடத்தில் ஆரம்பத்தில் வாக்கிய கணிதம் பின் பற்றப்பட்டு வந்தது. தற்போது திருக்கணித முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. 
     மக்களுக்கு சரியான கணித முறையைத் தர வேண்டியது ஜோதிடர்களின் கடமை. அனைவரும் ஒன்று பட்டால் தான் ஜோதிட சாத்திரம் வளரும்.
 (இது கோவை கற்பகம் பல்கலைக்கழக கருத்தரங்கில் திரு.சுந்தர்ராஜன் அவர்கள் அளித்த பஞ்சாங்கம் பற்றிய கருத்துரை அன்னாருக்கு நன்றி)  


1 comment:

guru said...

master, பஞ்சாங்கம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை அருமை. இக் கட்டுரையை படிக்கும் யாரும் இனி திருக்கணித முறையைத் தான் பின்பற்றுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.