January 9, 2018

ஜோதிடத்தின் பாதை – 6

பகுதி - 15

(நன்றி : விக்கிபீடியா)

     பாபிலோனியாவில் தொடர்ந்து வான சாத்திர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுஇவர்கள் கண்டு பிடித்த ஜோதிடச்சாத்திரம் நாட்டில் ஏற்படும் தீங்குகளை எடுத்துக்கூறவும், மன்னருக்கு எதிர்காலத்தில் ஏற்படும் வெற்றி தோல்வி குறித்து அறிவதற்காகவுமே பயன்படுத்தப்பட்டு வந்ததுதனிமனித முன்னேற்றத்திற்காக தற்போது பார்க்கும்  தனிமனித ஜாதக முறைகளை அவர்கள் பயன்படுத்தவில்லை
     சூரிய சந்திர கிரகண கணிதங்களைக் கொண்டு பன்னிரு இராசிச் சக்கரத்தை அமைத்தவர்கள் பாபிலோனியர்களேவான மண்டலமானது மொத்தம் 360 பாகைகளைக் கொண்டதுஅதனை எளிதாகக் கணிப்பதற்காக சதுரமாக வரைந்து 12 கட்டங்களாகப் பிரித்து ஒரு இராசிக்கட்டத்திற்கு 30 பாகை என்று பிரித்தது இவர்களின் காலத்தில்தான்.
      வான சாத்திர ஆய்வுகளில் ஆழ்ந்த அறிவு பெற்ற பாபிலோனியர்கள்   சூரியன் மற்றும் சந்திரனைத் தவிர மீதமுள்ள 5 கோள்களையும் கண்டுபிடித்தார்கள்.    அவைகளின் பெயர்களைப் பாருங்கள் :
                                        சூரியன்            = சமாஷ்
                    சந்திரன்           = சின்
                    செவ்வாய்       = நெர்கல்
                    புதன்                  = நாபு
                    குரு                     = மார்துக்
                    சுக்கிரன்           = இஷ்தர்
                    சனி                     = நினிப்

     பாபிலோனியர்கள் தெய்வீக வழிபாட்டில் சிறந்து விளங்கியதால் தாங்கள் கண்டு பிடித்த கோள்களுக்கும் தாங்கள் வழிபடும் கடவுள்களின் பெயர்களையே சூட்டி அவற்றை வணங்கி வந்தனர்.
     இன்றைக்கு எல்லா தொலைக்காட்சிகளிலும் ராசிபலன், பெயர்சிபலன் என்று கூறி ஒவ்வொரு கோவிலாக எல்லா ஜோதிடரும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் கிரக வழிபாடு எப்போது முதல்  இருந்து வந்திருக்கிறது பார்தீர்களா?
     இன்றைக்கு ஜாதகம் பார்க்கும் எல்லோருமே தங்களின் துயரங்கள் தீர ஏதாவது பரிகாரம் இருந்தால்  சொல்லும்படி ஜோதிடரிடம் கேட்காமல் இருப்பதில்லை.
     ஒரு நாள் ஒரு நபர் சாதகம் பார்க்க வந்திருந்தார்ஜாதகம் பார்த்து முடித்த பின்சார் ஒரு சின்ன விஷயம் என்றார்.
என்ன சொல்லுங்கஎன்றேன்.
என் ப்ரெண்டு ஒரு சந்தேகம் கேட்டுட்டு வரச்சொன்னார்
என்ன கேளுங்க
அவர் பையன் நல்லா படிச்சி பெரிய ஆளா வரணுமாம்  பொதுவா இந்த மாதிரி பரிகாரத்துக்கு நீங்க எந்த கோவிலுக்கு அனுப்பி வைப்பீங்கன்னு கேட்கச் சொன்னார்.
அப்படியா.....சரி ...அவர் பையன் என்ன  படிச்சிகிட்டு இருக்கார்..
படிக்கலைங்க…. ரெண்டு வயசு ஆகுது
அவர மொதல்ல கொழந்தய ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கச்சொல்லுங்க என்றேன்.


பயணம் தொடரும்……


January 2, 2018

ஜோதிடத்தின் பாதை - 5

பதிவு - 14 

     நதி சார்ந்த இடங்களில் தான் கலாசாரங்கள் வளர்ந்து வந்தன என்று பார்த்தோம்சுமேரிய கலாசாரமானது கி.மு.5000 முதல் கி.மு.3000 வரை இருந்துள்ளதுஇதன் பின்னர் பாபிலோனிய பேரரசால் இது முடிவுக்கு வந்தது
     மெசபதொமியா என்றால் கிரேக்க மொழியில் இரண்டு நதிகளுக்கு இடையில் உள்ள மேட்டு நிலப்பகுதி என்பது பொருளாகும்.  இன்றைய ஈராக் நாட்டில் உள்ள புகழ் பெற்ற யுப்ரடீஸ் டைகிரிஸ் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியே மெசபதோமியாவாகும்.  இதற்கு கீழ்ப்புறத்தில் தெற்கு பகுதியில் இருந்த நாடு பாபிலோனியாவாகும்.  உலக அற்புதங்களில் ஒன்றான தொங்கும் தோட்டம் இருந்த நாடு.  பாபிலோன் என்றால் கடவுளின் நுழைவு வாயில் என்று பொருள்படுகிறது.  இவர்களது ஆட்சி காலத்தில் கி.மு.18 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.16 ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலங்களில் விண்வெளி ஆய்வுகள் நடத்தப்பட்டு ‘எனுமா அனுஎன்லில் என்ற முதல் ஜோதிட நூல் உருவாக்கப்பட்டது. 
     நதிகள் பற்றி எழுதும் போது ஏ.ஆர்.ரஹுமான் இசையில் ரிதம் என்ற படத்தில் அர்ஜூன் பாடும் (குரல் உன்னிமேனன்) ‘நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே என்ற இனிமையான பாடல் நினைவுக்கு வந்தது.  அதை காணொளியில் இங்கு காணலாமா..




பயணம் தொடரும்......





January 1, 2018

2018 புது வருட வாழ்த்து


இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்துக்கள்

2018


இந்த புதிய வருடம் அனைவருக்கும் நன்மையை அளிக்கட்டும்