January 31, 2013

ஜோதிடத்தின் பாதை - 1

பதிவு - 10





     எந்த ஒரு கலைக்கும் வரலாறு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

     வருங்காலத்திற்கு ஒளி விளக்காய் திகழ்ந்து வழி காட்டும் அறிவியல் கலை இந்த ஜோதிடம் எனக் கூறலாம்.

     இதனை அறிந்து தெளிய நமது முன்னோர்களும், ஞானிகளும், சித்தர்களும் நமக்கு அளித்த மிக அரிய பொக்கிஷம் இச் ஜோதிடக்கலை.

     இதன் ஆரம்பத்தை சற்று அறியக் காண்போம்.

     படிமுறை வளர்ச்சியின் அடிப்படையில் மானுடர்கள் எல்லாவற்றையும் ஆராயத் தலைப்பட்டனர்.  தங்களுக்கு ஏற்படும் பயத்தின் காரணமாக அதற்கு விடை காண முற்பட்டனர். இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தங்களின் தற்காப்பு நடவடிக்கை எந்த வித பயனையும் தராத போது, அந்த இயற்கை இடர்களையே வேண்டிக் கொண்டால் ஓரளவு நல்ல பயன்கள் ஏற்படலாம் என்று நம்பினர்.  அதன் விளைவாக இயற்கையை, வழிபடும் கடவுளாகவே அமைத்துக் கொண்டார்கள்.

     அது மட்டுமன்றி இந்த இயற்கைச் சீற்றங்கள் எப்போது ஏற்படும் என அறிய ஆவலாக இருந்தனர்.  அதனால் மழைச் சகுனம், பறவை சகுனம் என்பதோடு விண்ணில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு அதனையும் சகுனமாக்கி கண்களுக்குப் புலப்படும் சூரிய சந்திரனை ஆய்வு செய்ய முற்பட்ட போது வானவியல் ஜோதிடம் உருவெடுத்தது.

     கிரகண காலங்களில் ஏற்படும் மாற்றங்களையும், பறவைகளின், விலங்குகளின் கூச்சல்களையும் கண்டு அந்த காலம் தீயது என முடிவெடுத்தனர்.
     மின்னிக் கண் சிமிட்டும் ஒளியினைத் தரக்கூடிய வற்றை நட்சத்திரங்கள் என்றும் கண் சிமிட்டாத தன்மை யுடையவற்றை கோள்கள் என்றும் வரையறுத்தனர்.

பயணம் தொடரும் . . . . 

   

January 1, 2013

Happy new year

பதிவு ... 9

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்





நண்பர்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.


இந்த உலகம் அற்புதங்களால் நிறைந்தது . அதை உணர்ந்தவர்களுக்கு அது பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டே  இருக்கும். ஜோதிடமும் அப்படித்தான்  எண்ணிலடங்கா விஷயங்களை தனக்குள் கொண்டு காலகாலமாய் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறது. 
வான மண்டலத்தில் இருக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒரே ஒரு நட்சத்திரத்தைப் பற்றி கூட முழுமையாய் அறிய நம் ஆயுள் போதாது. சில சமயங்களில் ஜோதிடர்களின் கணக்கு மாறிப் போகலாம். ஆனால் ஜோதிடம் என்றைக்கும் தவறாகாது. 
இந்தப் புது வருடத்தில் நிறைய விஷயங்களைப் பற்றி பேசப்போகிறோம் fhj;jpUq;fs;;;