February 3, 2013

ஜோதிடத்தின் பாதை - 3

பதிவு – 12





     இவ்வுலகம் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்து கொண்டே தான் வருகிறது.  அந்த வளர்ச்சிகளைப் பார்த்தால் அவை அனைத்தும் நீர்
நிலைகள் மற்றும் நதிகளைச் சார்ந்து உள்ள இடங்களாகத் தான் வளர்ந்து வந்திருக்கும்.
     நாகரிகம் ஆரம்பித்தது அப்படித்தான். யூப்ரடிஸ் டைகிரிஸ் (மெசபடோமியா), கங்கை நதி (இந்தியா), வோல்கா நதி (கிரேக்கம்,ரோம்),  நைல் நதி (எகிப்து), மஞ்சள் நதி (சைனா) என நதி சார்ந்த இடங்களில் உள்ள நாடுகள் நாகரீகத்தை வளர்த்துக் கொண்டன.
     முதன்முதலில் பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வினை சுமேரிய, மெசபடோமிய மக்கள் தான் தோற்றுவித்தார்கள். ஏறத்தாழ கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆய்வை தொடங்கி உள்ளார்கள்.  வானவியல், ஜோதிட சாத்திரத்தின் முன்னோடிகள் என்று இவர்களை அழைக்கலாம்.
     சூரிய சந்திரர்களை கடவுளாக்கி விண் வெளியில் காணும் ஒளி மாற்றங்களைக் கொண்டு வான சாத்திர ஆய்வைச் செய்து வ்ந்தார்கள். 
     அவர்கள் கண்டுபிடித்த கடைப்பிடித்த சோதிட முறைகளை களிமண்ணால் பொறித்து வைத்தார்கள். அதைப் பார்த்தீர்கள் என்றால் எழுத்துக்கள் என்பதை விட வடிவங்கள் என்று சொல்லலாம். அந்த எழுத்து வடிவ முறைக்கு க்யூனிஃபார்ம் (Cuneiform) என்று பெயர்.
     கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.




(படங்கள் : நன்றி  wiki)



    இந்த எழுத்துக்களை பார்க்கும் போது ஒன்று தோன்றியது. என்னிடம் ஜாதக பலன் கேட்க  வருகின்ற அன்பர்கள் கொண்டு வரும் அந்த ஜாதக நோட்டில் உள்ள விவரங்களைப் பார்க்கும் போது கண் வலிதான் மிஞ்சும். ஏனெனில் அதில் உள்ள எழுத்துக்கள் புரியவே புரியாது. அந்த எழுத்துக்களை விட இந்த க்யூனிஃபார்ம் எழுத்துக்கள் எவ்வளவோ தேவலாம்.
     இந்தியாவில் இந்த வானவியல் சாத்திரமானது வேதகாலம் தொட்டு ஆரம்பித்தது.  வேதகாலம் என்பதில் கி.மு.4000, கி.மு.2000 என்று கால வேறுபாடுகள் இருந்தாலும், இந்திய ஐரோப்பியர்கள் எனப்படும் ஆரியர்கள் உருவாக்கியது தான் வேதங்கள் என வரலாறு கூறுகிறது.
     விக்கி”யிடம்  மேற்கொண்டு விவரங்களை கேட்டுக் கொள்ளுங்கள். பழைய வரலாற்றை கிளற ஆரம்பித்தால் நமக்கு குழப்பமே வந்து விடும். 
     நமது இந்தியாவில் தொன்மையான இந்து   சமயத்தில் இருந்து தான் இந்திய ஜோதிட சாத்திரம் உருவாகிறது. அடிப்படையான நான்கு  வேதங்களிலும்  ஜோதிட சாத்திரம் இருந்துள்ளது.  இதில் சாம வேதத்தின் ஜோதிட சாத்திரம் கிடைக்கப் பெறவில்லை.  ருக், யஜூர் மற்றும் அதர்வண வேதங்களில் உள்ள ஜோதிட சாத்திரமே இந்திய ஜோதிட வரலாற்றின் தொடக்கம் எனலாம்.  
     இன்றளவும் வேதத்தின் ஒரு அங்கமாகத்தான் ஜோதிஷம் கருதப்பட்டு வருகிறது. 
    

பயணம் தொடரும் . . . . 

No comments: